சுதந்திர தின வாழ்த்துக்கள் - 2008

சுதந்திரத்திற்கு பின் நாம் அரிசிக்கு மாறினோம். பிறகு அரிசியை நன்றாக தீட்டி வெறும் சக்கையை சாப்பிட ஆரம்பித்தோம். அன்றிலிருந்து நமக்கு கேடு காலம் துவங்கி விட்டது. கோதுமையையும் நன்கு தீட்டி வெறும் சக்கையையே உண்கின்றோம். மற்ற தானியங்களை ஓரம் கட்டி விட்டோம். காய்கறிகளையும் விலை காரணமாய் விட்டுவிட்டோம். எல்லாவற்றிற்கும் மின் இயந்திரங்கள் வந்து விட்டன. நாமும் தொலைகாட்சியில் மூழ்கி விட்டோம். நடையையும் குறைத்து எடையை கூட்டி விட்டோம். வைத்தியரை நாடி, மருந்துகளை நாடி, நலத்தை தொலத்து விட்டோம். நாமே இப்படி இருக்கும் போது அரசை முழுமையாக குற்றம் சொல்லக்கூடாது. எத்தனை வீடுகளில் காலி இடம் இருக்கின்றது. அவற்றில் சமையல் தோட்டம் போட்டால் நல்ல காய்கறி குறைந்தவிலையில் கிடைக்கும்.