நகைச்சுவை - உதவிக்கு 1-800-800-HELP

அர்கன்சா ஆற்றுப்பக்கம் வேட்டையாடப் போனார்கள் இரண்டு நண்பர்கள். போன இடத்தில் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்து விட்டார். கண்கள் செருகியிருக்க, அவரிடமிருந்து எந்த ஒரு அசைவும் இல்லை. பதறிப்போன இன்னொரு ஆள் உடனே அவசர உதவி மையத்துக்கு செல்போன் போட்டார்.
''என் நண்பர் இறந்துவிட்டார். இப்போ நான் என்ன செய்வது?'' என்று கேட்டார். மையத்தில் இருந்தவர் இவரை அமைதிப் படுத்தும் விதமாக, ''ஓகே. கூல்டௌன்...
நான் உதவி பண்றேன். முதல்ல உங்க நண்பர் இறந்துட்டாரான்னு உறுதிப்படுத்திக்கணும்'' என்று ஆரம்பித்தார் இதமான குரலில்.
அடுத்து மறுமுனையில் ஆழ்ந்த அமைதி. சில விநாடிகளிலேயே அந்த அமைதியைக் கிழித்தது துப்பாக்கி வெடிக்கும் சத்தம்!
இப்போது போனில் வேட்டைக்காரரின் குரல் மீண்டும் ஒலித்தது: ''ஓகே. இப்ப சொல்லுங்க. நான் என்ன செய்யட்டும்
MSN நிருவனம் http://www.start.com/ என்று ஒரு இணைத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள். அங்கு நீங்கள் அடிக்கடி செல்லும் இணையத்தின் RSS யை பதிவு செய்துவிட்டால் போதும், இனி பதிவு செய்யப்பட்ட இணையத்தின் மாற்றங்களை http://www.start.com/ லிருந்தே பார்க்கலாம்.