நான் சென்ற மூன்று நாட்களாக அர்கன்சாஸ் தமிழ் சங்க விளையாட்டு போட்டிகள் 2008 ன் DVD தயாரிப்பில் இருந்ததால் அதிகமான வேலைகள். சுமார் இரண்டரை மணி நேரம் ஒளி பதிவு செய்யப்பட்ட படத்தை, சரியாக பதியாத படத்தையெல்லாம் வெட்டி பாதியாக குறைத்து, ஒரு மணி 17 நிமிடம் ஓடக்கூடிய படத்தை, அனைத்து பெயர்களும் தமிழிலேயே உருவாக்க சுமார் 14 மணி நேரத்திற்கும்மேல் ஆனது. இந்த DVD ல் பலவேறு தமிழக விளையாட்டுக்கள் அடங்கிய சுவாரசியமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் இது நமது இளமை கால நினைவுகளின் பெட்டகமாக இருக்குமென நினைக்கின்றேன். மேலும் விவரங்களுக்கு www.artamilsangam.org யை பார்க்க. உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.