உடல் நலம் - யோகா

இந்தியாவில் தோன்றி இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தாது யோகாவும், பிராணயாமமும் ஒன்று. நான் சென்னையில் இருந்த போது கற்ற பல நல்ல விசயத்தில் இதுவும் ஒன்று. நான் யோகாவை கற்று 8 ஆண்டாகியும், நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது செய்து வருகிறேன்.  அதன் பயனை இப்போது உணர முடிகிறது.  யோகாவின் பயன்களில் கீழ்கண்ட சிலவற்றை கூறலாம்.

1. யோகாவும், பிராணயாமமும் செய்யும் போது இதய துடிப்பு அதிகரித்து இரத்தத்தில் பிராண வாயுவை அதிகரிக்கிறது. இதனால் உடல் அணுக்கள் புதுப்பிக்கப்பட்டு உடல் பொழிவு பெறுகிறது.
2. சில ஆசனங்கள் உடலின் இணைப்பு தசைகளை உறுதிப்படுத்துவதால் உடல் வலி மற்றும் மூட்டு வலியை நீக்குகிறது
3. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
 
மேலும் பல பயன்களை செலவில்லாமல் தரும்போது, நாம் அனைவரும் தினமும் செய்தாலென்ன?
மேலும் அறிய,

அர்கன்சாஸ் தமிழ் சங்க விளையாட்டு போட்டிகள் 2008 DVD

நான் சென்ற மூன்று நாட்களாக அர்கன்சாஸ் தமிழ் சங்க விளையாட்டு போட்டிகள் 2008 ன் DVD தயாரிப்பில் இருந்ததால் அதிகமான வேலைகள். சுமார் இரண்டரை மணி நேரம் ஒளி பதிவு செய்யப்பட்ட படத்தை, சரியாக பதியாத படத்தையெல்லாம் வெட்டி பாதியாக குறைத்து, ஒரு மணி 17 நிமிடம் ஓடக்கூடிய படத்தை, அனைத்து பெயர்களும் தமிழிலேயே உருவாக்க சுமார் 14 மணி நேரத்திற்கும்மேல் ஆனது. இந்த DVD ல் பலவேறு தமிழக விளையாட்டுக்கள் அடங்கிய சுவாரசியமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் இது நமது இளமை கால நினைவுகளின் பெட்டகமாக இருக்குமென நினைக்கின்றேன். மேலும் விவரங்களுக்கு www.artamilsangam.org யை பார்க்க. உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.




புத்தாண்டு வாழ்த்துகள் - 2009