அப்ப தான் அந்த ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்திருந்தார். அவங்கம்மாவும் சின்னவனை திருத்தலாம்னு கூட்டிட்டு போனாங்களாம்.
அந்த சாமியார பையன் விநோதமா பார்க்க அவர் சிரிச்சிக்கிட்டே கேட்டார்"கடவுளை பாத்திருக்கியா?"
பையன் புரியாம முழிச்சான்.
திரும்பவும் அவர் ,"கடவுள் எங்கிருக்கார்னு தெரியுமா"ன்னார் லைட்டா முறைச்சிக்கிட்டே.
பையன் லேசா கலவரமாயிட்டான்.அவர் விடாம "சொல்லு கடவுள் எங்கிருக்கார்?"பையன் பயத்தில அழ ஆரம்பிக்க அவங்கம்மாவுக்கு ஆச்சர்யம்.
அவர் அப்புறமும் "கடவுள் எங்கே சொல்லு கடவுள் எங்கே"ன்னு கேட்கபையன் சத்தம் போட்டு அழுதுகிட்டே வேகமா ஓட்றான் வீட்டை பாத்து.
வீட்டுக்குள்ளே அண்ணன் ரூமுக்கு போய் வேகமா கதவ சாத்திட்டு பயத்தோட நிக்க அண்ணன் கேட்டான் "என்னடா பிரச்னை ஏன் இப்டி ஓடி வர்ர?""
இல்ல நிலைமை மோசமாய்டிச்சி"
"ஏன் என்னாச்சு?"
"கடவுளை காணோமாம்"
"அதுக்கு?"
"எல்லோரும் நம்மளை சந்தேகப்படறாங்க"

அர்கன்சா ஆற்றுப்பக்கம் வேட்டையாடப் போனார்கள் இரண்டு நண்பர்கள். போன இடத்தில் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்து விட்டார். கண்கள் செருகியிருக்க, அவரிடமிருந்து எந்த ஒரு அசைவும் இல்லை. பதறிப்போன இன்னொரு ஆள் உடனே அவசர உதவி மையத்துக்கு செல்போன் போட்டார்.
''என் நண்பர் இறந்துவிட்டார். இப்போ நான் என்ன செய்வது?'' என்று கேட்டார். மையத்தில் இருந்தவர் இவரை அமைதிப் படுத்தும் விதமாக, ''ஓகே. கூல்டௌன்...
நான் உதவி பண்றேன். முதல்ல உங்க நண்பர் இறந்துட்டாரான்னு உறுதிப்படுத்திக்கணும்'' என்று ஆரம்பித்தார் இதமான குரலில்.
அடுத்து மறுமுனையில் ஆழ்ந்த அமைதி. சில விநாடிகளிலேயே அந்த அமைதியைக் கிழித்தது துப்பாக்கி வெடிக்கும் சத்தம்!
இப்போது போனில் வேட்டைக்காரரின் குரல் மீண்டும் ஒலித்தது: ''ஓகே. இப்ப சொல்லுங்க. நான் என்ன செய்யட்டும்