நிலா நலம் - என் புதிய புத்தகம்



பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக நான் படித்தும் அனுபவித்தும் எழுதி வைத்த குறிப்புகளை ஓராண்டாகத் தொகுத்து, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ஒரு உடல்நலப் புத்தகமாக்கி, “நிலா நலம்” என்ற பெயரில் இந்த வாரம் வெளியிட்டேன்.

எனக்குப் பகைவர் என்று யாரும் இல்லை. ஒருவேளை எனக்குத் தெரியாமல் யாராவது இருந்தாலும், அவர்களும் இந்நூலைப் படித்துப் பயன்பெற வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்.

என்னை மது அருந்த வற்புறுத்தி என் உடலையும் அறிவையும் அழிக்க நினைப்பவர்களையும், தீய எண்ணத்துடன் உணர்ச்சியைத் தூண்டும் பேச்சுகளால் என் மூச்சையும் இதயத்துடிப்பையும் அதிகரிக்கச் செய்ய நினைப்பவர்களையும் நான் மனிதர்களாகவே மதிப்பதில்லை. அவர்களை நான் ஏன் மனித வேடமிட்ட ஓநாய்களாகவோ நரிகளாகவோ எண்ணுகிறேன் என்பதை இந்தப் புத்தகத்தைப் படித்தபின் தெரிந்துகொள்வீர்கள்.

சூரியனின் ஒரு நாள் தாளத்தையும் நிலவின் முப்பது நாள் சுழற்சியையும்  அடிப்படையாகக் கொண்ட ஓர் உடல்நல முறை. ஆயுர்வேதம், சித்த மருத்துவம், நவீன மருத்துவம், ஊக்கியியல், மென்பொருள் உலகின் சுழற்சி முறை (Agile)  இவைகளை கொண்டு, கவனம், தாளம், சுழற்சி  இந்த மூன்றைச் சுற்றியே நூல் அமைந்திருக்கிறது.

இந்தப் புத்தகம் அமேசான் இணையதளத்தில் கிடைக்கிறது. வாங்கிப் பயன்பெறுங்கள்.
 

https://www.amazon.in/dp/B0HLSTPY92


அன்புடன்

அமல் யாகுலசாமி

04 October 2026